The Plato's cave

வாசிப்பும் அதன் நிமித்தங்களும்!


புத்தகம்

  • பழைய குருடி – த.ராஜன்: சில எண்ணங்கள்

    தொகுப்பின் இரு சிறுகதைகள் குறித்து.. இத்தொகுப்பை வாசித்துமுடித்து இரு மாதங்களுக்குப் பிறகு நினைவிலிருந்தும் குறிப்புகளிலிருந்தும் எழுதியது. கதை நிகழ்வுகளை நினைவுகூறுவதில் தவறிருக்கலாம். இதில் ‘பாலூட்டிகள்’ மற்றும் ‘பழைய குருடி’ கதைகளைக் குறித்த எனது வாசிப்பை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். மற்ற கதைகளைக் குறித்து வேறொரு தருணத்தில் எழுதவெண்டும். த. ராஜனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘பழைய குருடி’ பல காரணங்களால் தமிழில் கவனிக்கத்தக்க படைப்பாகிறது. இதில் இரண்டு சிறுகதைகள் நீங்கலாக, மற்ற கதைகளின் முதுகெலும்பாக தலித் வாழ்வும், தலித்… Continue reading

  • மா ஜியான் – நாக்கை நீட்டு: வாசிப்பனுபவம்

    மா ஜியான் – நாக்கை நீட்டு: வாசிப்பனுபவம்

    நாக்கை நீட்டு, துணுக்குறச் செய்யும் கதைகளடங்கிய சிறுகதைத் தொகுப்பு. ஆங்கிலத்தில் eerie என்ற சொல் நினைவிற்கு வருகிறது. Atmospheric, eerie stories about Tibet culture that is unknown to the world. இத்தொகுப்பு இது தரும் அதிர்ச்சிக்காகப் பரவலாகப் பொதுவாசகர்களையும் சென்றடையக்கூடும். ஆனால் இது அதுமட்டுமா என்பதில் வைத்து நம் வாசிப்பைத் தொகுத்துக்கொள்ளலாம். Continue reading

நதிக் கல்

இதற்குமேல் உருளமுடியாது
கல் நதியைவிட்டுக் கரையேறிற்று
இதற்குமேல் வழவழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கிவிட்டு
நதி ஏகிற்று

வண்ணதாசன்