The Plato's cave

வாசிப்பும் அதன் நிமித்தங்களும்!


சினிமா

  • கென் லோச்சின் Kes — மாரி செல்வராஜின் வாழை: ஒரு இணை வாசிப்பு

    கென் லோச்சின் Kes — மாரி செல்வராஜின் வாழை: ஒரு இணை வாசிப்பு

    “இரக்கப்பண்பைக் (Pathos) கொண்டு பார்வையாளர்களை நெகிழவைக்காமல் பருண்மையான (Something Concrete) ஒன்றைக் கொண்டே நெகிழ்த்த வேண்டும்” அந்நியப்படுத்தல் / தூரப்படுத்தல் விளைவு (Distancing Effect — Bertold Brecht) Resnais-இன் ‘Night and Fog’ என்ற அற்புதமான படம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். – ஒரு நேர்காணலில் ஆனியெஸ் வர்தா நம்பி கிருஷ்ணனின் இலக்கியத் திரைப்படக் கட்டுரைகள் (நரி முள்ளெலி டூயட்) – யாவரும் வெளியீடு [அண்மையில், கென் லோச் இயக்கத்தில் 1969ல் வெளியான திரைப்படமான Continue reading

  • திரை: Munnariyippu (2014) சில குறிப்புகள்

    திரை: Munnariyippu (2014) சில குறிப்புகள்

    Munnariyippu (2014 | Malayalam | sun nxt | AR: 2.35:1 | Dolby Audio [கதை குறித்து பேசுவதால் படத்தைப் பார்க்காதவர்கள் இப்பதிவைத் தவிர்ப்பது நலம். கட்டாயம் பார்த்துவிட்டு வந்து பதிவைப் படிக்கவும்] எனக்கு மிகப்பிடித்த காஃப்கா கதாபாத்திரம் யார் தெரியுமா? ஜோசப் கா. எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபடாத அவன் விசாரணைக்கு உட்படுத்தப்படுவான். அவனொரு துரதிர்ஷ்டம் பிடித்த மனிதன். — பிரதாப் போத்தன் படத்தின் துவக்கத்தில் தனது விருந்தில் பங்கெடுத்த பத்திரிகையாளர்களிடம் சொல்வது. இப்படத்தை Continue reading

  • மென்மையாக ஒரு ந்வார் படம் – Experiment in Terror (1962) அனுபவம்

    மென்மையாக ஒரு ந்வார் படம் – Experiment in Terror (1962) அனுபவம்

    *SPOILER ALERT Experiment in Terror Directed by Blake Edwards / 1962 / United States ”ந்வார்” (noir) படங்கள் என்றைக்கும் எனக்கு நெருக்கமானவை. விமர்சனம் நன்றாக இல்லையெனில் கூட ஒரு படம் “ந்வார்” வகைமை என்றால் பார்த்துவிடுவேன். இப்படத்தில் மிகப் பிடித்த ஒன்று–இதன் காரணமாகவே இப்படத்தை நினைவில் வைத்திருக்கப்போகிறேன்–இதில் வரும் ஒரு பாத்திரம் முதன்முறையாக தன்போக்கிலிருந்து விலகி வழக்கத்திற்கு மாறான முடிவை எடுப்பதும் அதனால் ஏற்படும் விளைவும்தான். காவல்துறைக்கு குற்றங்களைக் கண்டறிவதில் மறைமுகமாக Continue reading

நதிக் கல்

இதற்குமேல் உருளமுடியாது
கல் நதியைவிட்டுக் கரையேறிற்று
இதற்குமேல் வழவழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கிவிட்டு
நதி ஏகிற்று

வண்ணதாசன்